நாம் பயிரிட்டு  நாம் உண்போம் தொனிப்பொருளில் வடக்கின் துரித விவசாய மீள்எழுச்சி ஆரம்பம்! 


விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர மற்றும் விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன் ஆகியோர் கிளிநொச்சி மாவட்டத்துக்கு விஜயம் மேற்கொண்டதோடு நாம் பயிரிட்டு  நாம் உண்போம் என்ற தொனிப்பொருளில் வடக்கின் துரித விவசாய மீள்எழுச்சி எனும் எண்ணக்கருவில்  கமத்தொழில் அமைச்சின் விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தின் பல்வேறு திட்டங்களையும் ஆரம்பித்து வைத்தனர்
இன்று மாலை கிளிநொச்சி இரணைமடு விவசாய பண்ணைக்கு  வருகைதந்த  விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர மற்றும் விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன் வடமாகாண சபை உறுப்பினர் தேவநாதன்  உள்ளிட்ட பிரமுகர்கள் கமத்தொழில் அமைச்சின் விவசாய நவீனமயமாக்கல்  திட்டத்துக்கான வேலைத்திட்டத்தை பார்வையிட்டு அதற்க்கான நாடாவைவெட்டி ஆரம்பித்துவைத்தார்கள்.
அதனைத் தொடர்ந்து இரணைமடு விவசாய பண்ணைக்கு தேவையான சூரிய மின்கலத்தையும் ஆரம்பித்து வைத்தார் தொடர்ந்து நாம் பயிரிட்டு  நாம் உண்போம் என்ற தொனிப்பொருளில் வடக்கின் துரித விவசாய மீள்எழுச்சி எனும் எண்ணக்கருவில்  கமத்தொழில் அமைச்சின் விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தின் பயன்களை பார்வையிட்டார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *