போருக்குப் பிறகு யாழில் மாபெரும் புத்தகத் திருவிழா


இலங்கை புத்தக விற்பனையாளர்கள், இறக்குமதியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் ‘யாழ் புத்தகத் திருவிழா 2019 ‘ எதிர்வரும் ஆகஸ்ட் 27ஆம் திகதி முதல் செப்டம்பர் 1ஆம் திகதி வரை யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

போர் முடிக்கப்பட்ட பின்னர், யாழ்ப்பாணத்தில், வடக்கில் இடம்பெறும் முதலாவது புத்தகக் கண்காட்சி இதுவாகும். வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனின் உதவியுடன் இக் கண்காட்சி நடைபெறுவதாக வட மாகாண ஆளுநர் அலுவலகம் வணக்கம் லண்டனுக்கு அனுப்பிய குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மிகப்பிரமாண்டமாக இடம்பெறவுள்ள இந்த புத்தகக் கண்காட்சியில் பாடசாலை மாணவர்களுக்கான புத்தகங்கள், ஈழத்துப்படைப்புக்கள் உள்ளிட்ட உள்ளூர் மற்றும் இந்திய மூத்த எழுத்தாளர்களின் புத்தகங்களும் காட்சிப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *