வாழையில் உணவு | அசத்தும் யாழ் பல்கலை மாணவர்கள் | குவியும் பாராட்டு


தமிழர்களின் பண்பாட்டு அம்சங்களில் ஒன்றான வாழை இலையில் உணவு உண்ணும் பழக்கத்தை யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் தமது வழக்கமாக மாற்றியுள்ளனர். முன்னுதாரமான இந்தச் செயற்பாட்டினால் அனைவரதும் பாராட்டையும் பெற்று வருகின்றனர்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்ச்சியாக இன ரீதியாகவும் பண்பாட்டு ரீதியாகவும் போராட்ட ரீதியாகவும் பல்வேறு பங்களிப்புக்களை காலம் காலமாக ஆற்றி வருகின்றனர். அந்த வகையில் அண்மையில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், பல்கலைக்கழக வளாகத்திற்குள் பொலீத்தீன் பாவனையை தடுக்கும் அறிவித்தலை வெளியிட்டு பாராட்டுக்களை அள்ளியது.

இந்த நிலையில் தற்போது பல்கலைக்கழக உணவகத்தில் வாழையில் இலையில் சாப்பிடும் வழக்கத்தை கொண்டு வந்துள்ளனர் மாணவர்கள். வாழை இலையில் சாப்பிடுவதனால் பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன. ஆரோக்கியமாக வாழ முடியும். புற்று நோயைக் கூட குணப்படுத்தும்.

யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் இந்த முயற்சிக்கும் பல்வேறு தரப்பினரும் பாராட்டி ஆதரவு தெரிவித்து வருகின்றனர். மாணவர்களின் இந்த முயற்சியை வணக்கம் லண்டனும் பாராட்டுகின்றது. இதுபோன்ற சமூக மற்றும் சூழல் அக்கறை சார்ந்த பல்வேறு செயற்பாடுகளை அவர்கள் முன்னெடுக்கவும் எமது வாழ்த்துக்கள்.

தொகுப்பு- வணக்கம் லண்டனுக்காக தீபன்Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *