ஜப்பானியர்களின் மருத்துவ ரகசியம் வெறும் 4 கிளாஸ் நீர் தானாம்!


உலகில் ஒவ்வொரு நாட்டினரும் வெவ்வேறு உடல் அமைப்புடனும், உளவியல் தன்மையுடனும் இருப்பார்கள். ஒரு  நாட்டினரின் உடல் மிகவும் மென்மையானதாக இருக்கும். வேறு சில நாட்டினரின் உடலமைப்பு மிகவும் கடினமாக இருக்கும். சிலர் கருப்பாகவும், சிலர் வெள்ளையாகவும் இருப்பார்கள். ஒவ்வொரு நாட்டு மக்களுக்கும் ஒரு தன்மை உள்ளது என்பதை நாம் நன்கு  புரிந்து கொள்ள  வேண்டும்.
இதற்கு புவியியல் ரீதியான காரணம் ஒரு புறம் இருக்க, மறுபுறம் அவர்கள் கடைப்பிடித்து வருகின்ற சில உணவு முறையும் தான் காரணம் என ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர். அந்த வகையில் ஜப்பானியர்களின் ஆரோக்கியத்தையும், புத்தி கூர்மையையும் பார்த்து பல நாடுகள் செய்த ஆய்வில், சில அற்புதமான விடைகள் கிடைத்தது.
ஜப்பானின் கலாசாரம் எப்படி?
மற்ற நாட்டு மக்களை போன்றே ஜப்பானியர்களும் தங்களது பண்பாட்டையும்  கலாசாரத்தையும் பெரிதும் மதிப்பார்களாம். அவர்களின் முன்னோர்களின் வழியே முதன்மையானதாக மக்கள் போற்றி வணங்குவர். குறிப்பாக அவர்களின் மருத்துவ முறை மற்றும் உணவு முறையே மிகவும் பிரசித்தி பெற்றதாம்.
ஜப்பானிய வைத்தியம் தெரியுமா..?
ஜப்பானியர்கள் இவ்வளவு  இளமையாகவும், கச்சிதமான உடல் அமைப்புடனும் இருக்க ஜப்பானிய வைத்தியம் தான் காரணமாம். இது ஒன்றும் மிக கடினமான வைத்திய முறை இல்லை. இந்த உலகில் இதைவிட எளிய வைத்திய முறை இருக்கவே முடியாது என ஆய்வாளர்கள் சொல்கின்றனர்.
விஞ்ஞானிகளின் கருத்து என்ன?
இந்த ஜப்பானிய முறை மிகவும் ஆற்றல் வாய்ந்த முறையாகும். அதாவது இது நீரை கொண்டு செய்யும் ஒரு வைத்திய முறையாகும். குறிப்பாக தினமும் 4 கிளாஸ் நீரை காலையில் எழுந்தவுடன் குடித்தாலே நீங்களும் ஜப்பானியர்களைப் போல அதிக ஆற்றலுடனும் கச்சிதமான உடல் எடையுடனும் இருக்கலாம் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
வெறும் 4 கிளாஸ் நீரா…?
உண்மையில் இது நிரூபணம் ஆக்கப்பட்ட ஜப்பானிய வைத்தியமாகும். காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் பல் துலக்குவதற்கு முன்பே வெறும் 4 கிளாஸ் நீரை குடித்தால் உடலில் அற்புதமான மாயாஜாலங்கள் நடக்கும் என கூறப்படுகின்றது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *