`கடலில் தரையிறங்கிய விமானம்!’ 


கடந்த வருடம் பசிபிக் கடலில் உள்ள மைக்ரோனேசியாவில் இருக்கும் சூக் (Chuuk) தீவிலுள்ள விமான நிலையத்தில், விமானம் ஒன்று தரையிறங்கும்போது எதிர்பாராதவிதமாக அருகில் உள்ள நீர்ப்பரப்பில் மோதி விபத்துக்குள்ளானது.

போன்பேய் விமான நிலையத்தில் இருந்து பப்புவா நியூ கினியாவுக்குச் செல்லும் வழியில், ஏர் நியூகினி விமானம் வெனோ தீவில் உள்ள சூக் விமான நிலையத்தில் நின்று செல்லும்.

பயணிகள் விமானமான இதில், அப்போது 47 பேர் பயணித்தனர். இந்த எண்ணிக்கையில் 35 பயணிகளும் 12 விமான ஊழியர்களும் அடங்குவர்.

மோசமான வானிலை காரணமாக நடந்த இந்த விபத்தில் யாருக்கும் பெரிய பாதிப்புகள் ஏற்படவில்லை என்றே முதலில் கருதப்பட்டது.

ஆனால், பயணி ஒருவர் இந்த விபத்தில் இறந்தது அடுத்த மீட்புப்பணிகளில் தெரியவந்தது.

ஓடுதளத்துக்கு 1,500 அடிக்கு முன்பே இந்த விமானம் தரையிறங்கியது எப்படி, இதற்கு என்ன காரணமாக இருக்க முடியும் என பப்புவா நியூ கினியா விசாரணை ஆணையம் ஒன்று அமைத்து விசாரித்து வந்தது.

வைரலாகியிருக்கும் வீடியோவில் “மிகவும் தாழ்வாக இருக்கிறோம், மிகவும் தாழ்வாக இருக்கிறோம்” என்று கோ-பைலட்டின் கணினி குரலில் எச்சரிப்பதையே நம்மால் கேட்கமுடிகிறது.

“17 முறை கணினிகளால் தெளிவான எச்சரிக்கைகள் கொடுக்கப்பட்டும் அதைக் கண்டுகொள்ளாமல் விட்டதுதான் விபத்துக்கு முக்கிய காரணம்.

52 வயதான கேப்டனின் கீழ்தான் இந்த விமானம் இயக்கப்பட்டது. அவருக்கு 20,000 மணிநேரத்துக்கு மேலான விமானம் ஓட்டும் அனுபவம் இருந்திருக்கிறது.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *