ஜெயலலிதா குற்றவாளி என தீர்ப்பு | முதலமைச்சர் பதவி இழப்பு?


சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என்ற தீர்ப்புக்கு எதிராக பல இடங்களில் அதிமுகவினர் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். காஞ்சிபுரம் அருகே அரசுப் பேருந்து ஒன்று தீ வைத்து எரிக்கப்பட்டது. திருச்சியில் கடைகள் அடைக்கப்பட்டு பேருந்து கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளன. மேலுமம் கல்வீச்சில் பொதுமக்கள் 4 பேர் திருச்சியில் காயம் அடைந்துள்ளனர். தீர்ப்புக்கு எதிராக பல இடங்களில் கடைகள் அடைக்க வற்புறுத்தப்பட்டு வருகிறது.  சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா தீர்ப்பளித்துள்ளார். இதன் மூலம் ஜெயலலிதா தனது முதலமைச்சர் பதவியை இழக்கிறார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்பட்டதால் எம்.எல்.ஏ பதவியை இழக்கிறார். ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் ஜெயலலிதா குற்ற்வாளி என அறிவிக்கப்பட்டுள்ளார். ஊழல் தடுப்பு சட்டத்தின் பிரிவு 13(1) இ-ன் கீழ் வழக்கு தொடரப்பட்டது. ஊழல் செய்ய கூட்டுச்சதி செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஜெயலலிதா முதலமைச்சர் பதவியை இழப்பதால் அ¬ம்சசர்களும் பதவி இழக்கின்றனர்.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *