யாழ். கம்பர்மலை வித்தியாலயதின் வைரவிழா நிகழ்வுகள் ZECAST இல் நேரலை


யாழ். வடமராட்சி கொம்மந்தறையில் அமைந்துள்ள கம்பர்மலை வித்தியாலயத்தின் வைரவிழா கொண்டாட்டம் நாளை வியாழக்கிழமை  காலை நடைபெறவுள்ளது.

வித்தியாலய அதிபர் வ.ரமணசுதன் தலைமையில் வித்தியால மைதானத்தில் காலை 10.30 க்கு ஆரம்பமாகவுள்ள நிகழ்வில் யாழ். இந்திய துணைத் தூதுவர் ச.பாலச்சந்திரன் பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார்.

வைரவிழாக் கொண்டாட்டத்தின் ஒரு அங்கமாக புதிதாக அமைக்கப்பட்ட பாடசாலை நுழைவாயில், பாடசாலை வளாகத்திற்குள் அமைக்கப்பட்டுள்ள சரஸ்வதிசிலை என்பன சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளன.

தொடர்ந்து பாடசாலை மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ள நிலையில், அதன் பின்னர் வைரவிழா மலர் வெளியீட்டு நிகழ்வும் இடம்பெறவுள்ளது.

நிகழ்வின் சிறப்பு விருந்தினர்களாக வலயக்கல்விப் பணிப்பாளர் யோகசாமி ரவீந்திரன் மற்றும் ஓய்வுநிலை வலயக்கல்விப் பணிப்பாளர் சிவபாதம் நந்தகுமார் மற்றும் கௌரவ அதிதிகள் பலரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

லண்டன் சுபாரா நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள வைரவிழா நிகழ்வுகள் கீழ் உள்ள ZECAST  இணைப்பில் ஒளிபரப்பாகவுள்ளன.

www.zecastlive.com/partner/template.php?id=773

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *