வடக்கு கிழக்கை இணைத்து, சுயநிர்ணய உரிமையுடன் கூடிய தீர்வை தருவோம்: JVP


 

வடக்கு – கிழக்கு இணைக்கப்பட்டு, சுயநிர்ணய உரிமையுடன் கூடிய தீர்வு முன்வைக்கப்படும் என்றும் தேசிய மக்கள் சக்தி இயக்கம் தெரிவித்துள்ளது.

இதற்காக ஜனாதிபதி தேர்தலில் அநுரகுமார திஸாநாயக்கவை தமிழ் மக்கள் ஆதரவிக்க வேண்டுமென்றும் கோரியுள்ளது. யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில், இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.

அங்கு தொடர்ந்துரைத்த அவ்வியக்கத்தினர், தேசிய மக்கள் சக்தியால், நாட்டில் அனைத்து மக்களுக்குமான வரைபு ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த வரைபு ஜனாதிபதி தேர்தலுக்கு மட்டும் உருவாக்கவில்லையெனவும் இது இறுதியான வரைபல்ல எனவும் தெரிவித்தனர்.

நாட்டில், அனைத்து மாகாணங்களில் உள்ள மக்களுடன் பேசி அடிப்படை பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதற்கான திட்டங்களும் அந்த வரைபில் இணைத்துக் கொள்ளப்படுமெனத் தெரிவித்த அவர்கள் இறுதியாக. முழுமையான திட்டமாக அது மாற்றப்படுமெனவும் கூறினர்.

அரசியலில் 3ஆவது பாதை தேவை என்பதை யாழ்ப்பாணத்தில் உள்ள மக்களும் ஏற்கின்றார்களெனத் தெரிவித்த அவர்கள், அதற்காக முற்போக்கு சிந்தனை உள்ள தமிழ் மக்கள் எங்களுடன் கைகோர்க்க வேண்டுமெனவும் கூறினர்.

காலிமுகத்திடலில் கூடிய கூட்டத்தைப் போன்று, யாழ்ப்பாணத்தில் மக்கள் அலை ஒன்றை திரட்ட உள்ளதாகத் தெரிவித்த அவர், அதில் தமது ஜனாதிபதி வேட்பாளர் மக்கள் முன்தோன்றி பேசுவாரெனவும் அவருடனும் மக்கள் பேச முடியுமெனவும் கூறினர்.

தலைவர் பேசுவதை மக்கள் கேட்க வேண்டுமெனவும் அதே போன்று மக்கள் பேசுவதை தலைவர் கேட்க வேண்டுமெனவும், அவர் மேலும் கூறினார்.



2 thoughts on “வடக்கு கிழக்கை இணைத்து, சுயநிர்ணய உரிமையுடன் கூடிய தீர்வை தருவோம்: JVP

  1. வடக்கு கிழக்கை இணைத்து சுயநிர்ணய உரிமையுடன் கூடிய தீர்வை தருவோம்” என்று சொல்றீங்க சரி. பத்திரிகைகளிலும் போட்டாச்சு. இதனால் மூன்று disadvantage உங்களுக்கு இருக்கு. வடக்கு கிழக்கு இணைப்பு என்று நீங்கள் சொன்னதால் சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களின் வாக்குகள் உங்களுக்கு விழாது. சொன்னத சொல்லிப் போட்டீங்க. அதுவே தெய்வ வாக்காயிடுச்சு. இப்ப தமிழ்த்தலைவர்கள் பிரதான கட்சி ஒன்னுக்கு வாக்களிக்கச் சொல்வார்கள். தமிழ் மக்கள் அதற்கு நிச்சயமாக அடங்கியே போய்விடுவார்கள். கடைசியா உங்களுக்கு சிங்கள வாக்குகளும் இல்லை. முஸ்லிம் வாக்குகளும் இல்லை தமிழ் வாக்குகளும் இல்லை. காலம் தாழ்த்தாது உடனடியாக மறுப்பு அறிக்கை ஒன்றினை விடுங்கள். ஆட்சி மாற்றம் நிகழ்ந்தவுடன் சூழ்நிலைகளுக்கு ஏற்ப நாட்டு மக்களுடன் பேசி சுமுகமான மாற்றத்தை ஏற்படுத்துவோம் என்று.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *