கலட்டி எச்சாட்டி மகா மாரியம்மன் ஆலயம் புனர்நிர்மானம்


 

யாழ்ப்பாணம் கலட்டி பிரதேசத்தில் எழுந்தருளியிருக்கும் எச்சாட்டி மகா மாரியம்மன் ஆலயத்தில்  புனர்நிர்மான வேலைகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இலங்கைப் பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன், வட மாகாணசபை உறுப்பினர்களான ஐங்கரநேசன் மற்றும் கஜதீபன் ஆகியோர் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டனர்.

கலட்டிப்பிரதேச மக்களின் பங்களிப்புடனும் புலம்பெயர்ந்து வாழும் ஊர் மக்களின் பங்களிப்புடனும் நிர்மாணம் செய்யப்படுகின்றது. ஆலயத்துக்கான ராஜகோபுரம், பிரகாரம், சுற்றுமதில் என  எச்சாட்டி மகா மாரியம்மன் மிகவிரைவில் புதுப்பொலிவுடன் அருள் பாலிக்க இருக்கின்றாள்.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *