செல்வத்தின் ‘சொற்களில் சுழலும் உலகம்’ நூல் மற்றும் ‘காலம்’ இதழ் அறிமுகம்


கனடாவில் புலம்பெயர்ந்து வாழும் செல்வம் அருளானந்த்தின் “சொற்களில் சுழலும் உலகம்” நூல் மற்றும் காலம் 54ஆவது இதழின் அறிமுகமும் லண்டனில் சிறப்பாக நடைபெற்றது.

Image may contain: 6 people, people smiling

காலம் இதழின் ஆசியரான செல்வம் அருளானந்தம் அவ் இதழை கடந்த முப்பது வருடங்களுக்கும் மேலாக வெளியிட்டு வருகின்றார். காலம் இதழ் ஊடாக பல்வேறுபட்ட படைப்புக்களையும் வெளியிட்டு வரும் இவர் தீவிரமான இலக்கிய உபாசகராகவும் மதிக்கப்படுகின்றார்.

Image may contain: 5 people, people sitting and indoor

கடந்த 02.02.2020 – மாலை 4.30 மணிக்கு London Tamil Sangam, 369, High Street North, Manor Park, E12 6PGஇல் நடைபெற்ற நிகழ்ச்சியை மீனாள் நித்தியானந்தன் நெறிப்படுத்தினார். அத்துடன் அறிமுக உரையை கே.கே.ராஜா வழங்கினார்.

Image may contain: 1 person, hat

அத்துடன் ‘காலம்’ இதழ் 54 குறித்து, பாத்திமா மஜீதா, தோழர் ச. வேலு ஆகியோர் உரை நிகழ்த்தினர். அத்துடன் சொற்களில் சுழலும் உலகம் நூல் குறித்து பா.அனோஜன், எம்.பெளசர், ஆகியோர் உரையாற்றினர்.

கனடாவில் இருந்து வருகை தந்த காலம் இதழாசிரியர் செல்வம் அருளானந்தம் கலந்து கொண்ட இந்த நிகழ்விற்கு பெருமளவான வாசகர்கள் வருகை தந்தனர். லண்டன் விம்பம் அமைப்பு இதனை ஏற்பாடு செய்தமை குறிப்பிடத்தக்கது.

Image may contain: 11 people, including Barathy Sivaraja, people smiling, people standingLeave a Reply

Your email address will not be published. Required fields are marked *