கல்லீரலை பாதுகாப்பும் அற்புதமான உணவுகள்!


கல்லீரல் உடலின் மிகவும் முக்கியமான உறுப்பு. இது உடலில் இருந்து நச்சுகள் அகற்றுதல், குளுக்கோஸ், இரும்பு மற்றும் கொழுப்பு சேர்க்கை போன்ற பல்வேறு உயிர்வேதியியல் செயல்முறைகளில் முக்கிய பங்கு வகிக்கின்றது.

தற்கால வாழ்க்கை முறை ஆரோக்கியமில்லாத சாப்பிடும் பழக்கங்கள் கல்லீரலுக்கு அழுத்தம் கொடுத்து சில பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.

பல்வேறு சிக்கல்களில் இருந்து முன்னமே ஒழுங்குபடுத்தும் கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுக்கு பயன்படும் சில உணவுகளைப் பார்ப்போம்.

காய்கறிகள்
அனேக காய்கறிகள் கல்லீரலில் ஒரு நேர்மறையான விளைவை வெளிப்படுத்துகின்றன. இருந்தாலும், சில காய்கறிகள் உறுப்புகளின் ஆரோக்கியத்தை பராமரிக்க மிகவும் உதவியாக உள்ளன. முட்டைக்கோஸ் போன்ற சோடியம் நிறைந்த காய்கறிகள், வெங்காயத்தில் உள்ள சல்பர், கேரட்டில் உள்ள நியாஸின் போன்றவை கல்லீரலுக்கு நல்லது. இது கல்லீரலின் நச்சுத்தன்மையை போக்குதல், தீங்கு விளைவிக்கும் நச்சுகளிலிருந்து பாதுகாப்பது மற்றும் நச்சுப் பொருட்களை உறிஞ்சுதலை தடுப்பது போன்றவற்றில் உதவுகிறது.

பூண்டு
ஆரோக்கியமான ஊட்டச்சத்து பரவலாக நிரம்பியுள்ள பூண்டு, கல்லீரல் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது. மேலும், பல நோய்களுக்கு எதிராக பாதுகாக்கிறது. கல்லீரல் சேதத்துக்கு காரணமான நச்சுகளை வெளியேற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கும் என்சைம்களை செயல்படுத்தும் திறனை பூண்டு பெற்றுள்ளது.

மஞ்சள்
மஞ்சள் ஒரு இயற்கையான உணவு. இதில் அதிகமான ஆரோக்கிய ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளது. இது கல்லீரலை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. ஒரு சிட்டிகை மஞ்சளை கறி, சூப் அல்லது பருப்புடன் அந்த உணவின் சுவையை அதிகப்படுத்த சேர்க்கும்போது, அது கல்லீரலின் நச்சுத்தன்மையை நீக்கும் திறனை மேம்படுத்துகிறது. உடலிலிருந்து புற்றுநோய் காரணிகளை நீக்குவதுடன் கூடுதலாக மஞ்சள், பித்தநீர் தயாரிப்பு தூண்டவும் உதவுகிறது.

உலர் பழங்கள்
உலர் பழங்கள், நார்சத்து மற்றும் ஒமேகா- 3 கொழுப்பு அமிலங்கள் போன்ற மற்ற ஊட்டச்சத்துகளின் உள்ளடங்கியுள்ளது. இது கல்லீரலுக்கும் மிகச் சிறந்தது. இது கல்லீரலை சுத்தம் செய்தல் மற்றும் கல்லீரலை பல்வேறு மருத்துவ சிக்கல்களிலிருந்து பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

நன்றி – மணிமேகலை பார்த்தசாரதி.

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *