காஞ்சனா 3 ரிலீஸ் தேதி வெளியானது


ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள காஞ்சனா 3 படத்தின் ரிலீஸ் தேதி தற்போது வெளியாகியுள்ளது.

ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் திகில் கலந்த நகைச்சுவை படம் காஞ்சனா 3 இந்தப்படம் முனி படத்தின் மூன்றாம் பாகமாக உருவாகி வருகிறது. இந்தப்படத்தில் நடிகைகள் வேதிகா மற்றும் ஓவியா ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர்.

மேலும் நிகிதா, கோவை சரளா, ஸ்ரீமன், தேவதர்ஷினி, கபீர் துஹான் சிங், மனோபாலா, சத்யராஜ், கிஷோர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்தப்படத்திற்கு எஸ்.தமன் இசையமைத்துள்ளார்.

படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இந்நிலையில், காஞ்சனா 3 படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து விட்டதாக தகவல் தெரிவிக்கின்றது.

இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி தற்போது வெளியாகியுள்ளது. இப்படம் வரும் ஏப்ரல் 19 இல் வெளியாகும் என படக்குழு திட்டமிட்டுள்ளது.

 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *