கவிதை | பாரதி கண்ட புதுமைப் பெண்கள் | காந்தி


கண்ணி வெடி அகற்றுகின்றார்கள் – கால்கடுக்க நின்று

தார் வீதி போடுகின்றார் -நிமிர்ந்த நேர் நடை

நேர் கொண்ட பார்வை . சமையலறையை விட்டு

சமுகத்தில் மாற்றம்  கண்டார்.

 

சுடிதார் தனையுடுத்திப் பிளசரிலே போகுமிவர்

அலுவலகம் போனதும் சீருடைக்கு மாறுகின்றார்.

கண்ணி வெடியகற்றக் காரிகைகள் போகின்றார்.

கரணம் தப்பினால் மரணம் தெரிந்துமிவர் செல்கின்றார்.

 

மஞ்சள் மேலுடையில் மங்கையர்கள் விதியிலே

கல்லும் அடுக்குன்றார் கிரவலும் பரவுகின்றார்.

கொல்லும் வெயிலிலும் கோதையர்கள் வாடுகின்றார்.

பாரதியார் சொன்ன புதுமைப் பெண் இவள் தானோ ?

 

கல்லிலும் முள்ளிலும் காட்டிலும் மேட்டிலும் அலைந்தாலும்

பொருளாதார சுதந்திரம் கண்டுவிட்ட பெண்கள் இவர்

விதம் விதமான நிறமுள்ள பிளசர்கள் ஓட்டி

ஆணுக்குப் பெண் நிகராக அழகாக வாழ்கின்றார்.

 

– காந்தி – 2 thoughts on “கவிதை | பாரதி கண்ட புதுமைப் பெண்கள் | காந்தி

 1. அழகான கவிதை சிந்தனையைத் தூண்டும் நிஜங்கள்
  கூடவே மனதில் ஒரு சோகம் வந்து சொல்லாமலேயே ஒட்டிக் கொள்கிறது
  என்று தணியும் எம் பெண்களின் சோகம்….!

  நல்ல கவிதை தந்த இந்த கவிஞருக்குப் பாராட்டுகள்

  From – Shivi

 2. பெண்களின் முன்னேற்றத்தையும் அவர்களால் கஷ்டமான வேலைகளையும்
  இலகுவாக செய்யமுடியும் என்பதைச் சொல்லும் அழகான கவிதை.
  வாசிக்கும் போது பொருளாதாரத்துக்காக இவர்கள் படும் கஷ்டங்கள்
  மனதை பாரமாக்கினாலும் நிஜத்தை கவிதை மூலம் தந்த காந்தி அவர்களுக்கு
  நன்றிகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *