கண்டியில் போன உயிருக்கு அரசாங்கம் 5 லடசம்!


கடந்த மார்ச் மாத ஆரம்ப காலப்பகுதியில் கண்டி மாவட்டத்தின் திகன, தெல்தெனிய பிரதேசங்களை அண்மித்த பகுதியில் இடம்பெற்ற அசம்பாவிதங்களின் விளைவால் உயிரிழந்த மூன்று நபர்களுக்கும் நட்ட ஈடுவழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்நிர்மானம், மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதன்படி அந்த வன்முறைச் சம்பவத்தால் உயிரிழந்த ஒருவருக்கு நட்டஈடாக 500,000 ரூபா வீதம் அவர்களின் குடும்பங்களுக்கு பெற்றுக் கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த சம்பவங்களின் போது காயமடைந்த நபர்களுக்காக, வைத்திய அறிக்கையினை அடிப்படையாகக் கொண்டு 250,000 ரூபா நட்டஈட்டு தொகையை பெற்றுக் கொடுப்பதற்கும் அமைச்சரவை தீர்மானித்துள்ளது.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − 2 =