கண்ணதாசன் விழா.


ஶ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனமும் கண்ணதாசன் கழகமும் இணைந்து பன்னிரண்டாம் ஆண்டாக கண்ணதாசன் விழா நடைபெறவுள்ளது.

வரும் ஞாயிறு ஜூன் 16 அன்று ஆர்.எஸ்.புரம் கிக்கானி மேல்நிலைப்பள்ளி சரோஜினி நடராஜ் கலையரங்கத்தில் மாலை 6.15 மணிக்கு இந்நிகழ்வு நடைபெறுகிறது.

இவ்விழாவில் எழுத்தாளர் சாரு நிவேதா மற்றும் பாடகர் ஜெயச்சந்திரனுக்கு கண்ணதாசன் விருது வழங்கப்படுகிறது.

கண்ணதாசன் விருது கடந்த 2009 முதல் எழுத்தாளர்கள், பாடகர்கள், பாடலாசிரியர்கள், திரைக்கலைஞர்கள், பதிப்பாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. இதற்கு முன் நாஞ்சில் நாடன், வண்ணதாசன், அசோகமித்திரன், ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன்,பிரபஞ்சன், சிற்பி, மாலன், கலாப்ரியா, அமுதோன் உள்ளிட்ட எழுத்தாளர்கள் விருது பெற்றுள்ளனர்.

மேலும் டி.ஆர்.எம். சாவித்திரி, சீர்காழி சிவசிதம்பரம், ராம முத்தையா, பதிப்பாளர் பி.ஆர்.சங்கரன், முத்துலிங்கம், வாணி ஜெயராம், பி.சுசீலா, பஞ்சு அருணாசலம், எல்.ஆர்.ஈஸ்வரி, எஸ்.பி.பாலசுப்ரமணியம் உள்ளிட்டோருக்கும் கண்ணதாசன் விருது வழங்கப்பட்டுள்ளது.

விருது பெறுபவர்களுக்கு 1 லட்சம் ரூபாய் பரிசும், பாராட்டுப் பட்டயமும் வழங்கப்படும்.

வரும் ஞாயிறன்று நடைபெறும் இவ்விழாவில் சங்கரா கண் மருத்துவமனை நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலர் ஆர்.வி.ரமணி தலைமை தாங்குகிறார். ஶ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனத்தின் எம்.கிருஷ்ணன், இசைக்கவி ரமணன், எழுத்தாளர் அராத்து உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *