வரலாற்றுச் சிறப்பு மிக்க கதிர்காமக் கந்தன் ஆலயத்தின் எசல வீதியுலா!


 

இலங்கையின் வரலாற்று சிறப்பு மிக்க கதிர்காம கந்தன் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டுள்ளனர்.

வரலாற்றுச் சிறப்பு மிக்க கதிர்காமக் கந்தன் ஆலயத்தின் எசல வீதியுலா நான்காவது நாள் இன்றாகும்.

இன்று இரவு 7 மணிக்கு வீதியுலா நடைபெறும். நேற்று வரை வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இருந்து பத்தாயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் கதிர்காமம் புனித பூமிக்கு சென்றுள்ளனர்.

பக்தர்களுக்கான ஏற்பாடுபகள் குறித்து கதிர்காம கந்தன் ஆலயத்தின் பதில் பஸ்நாயக்கநிலமே தில்றுவான் ராஜபக்ஷ தெரிவிக்கையில், நான்கு அன்னதான சாலைகள் அமைக்ககப்பட்டுள்ளன. பக்தர்களின் வசதிக்காக ஆலய மூலஸ்தானமும், பரிவார மூர்த்திகளும் 24 மணி நேரமும் திறந்திருக்கும் என்று கதிர்காம கந்தன் ஆலயத்தின் பதில் பஸ்நாயக்கநிலமே தில்றுவான் ராஜபக்ஷ தெரிவித்தார்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *