வரலாற்றுச் சிறப்புமிக்க கதிர்காமக் கந்தன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவப் பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.
அத்துடன், உகந்தைமலை ஸ்ரீ முருகன் தேவஸ்தான வருடாந்த ஆடிவேல் மகோற்சவ திருவிழாவும் (புதன்கிழமை) காலை 11.00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.
இந்த நிலையில், கதிர்காமக் கந்தன் ஆலயத்துக்கான பாதயாத்திரையும் ஆரம்பமாகியுள்ளது.
இதனிடையே, உகந்தை முருகன் ஆலயத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்ட முதலாவது பாதயாத்திரை இன்று கதிர்காமக் கந்தன் ஆலயத்தை சென்றடைந்துள்ளது.
கதிர்காம கந்தனின் மகோற்சவத்தில், எதிர்வரும் 12ஆம் திகதி தீ மிதிப்பு நடைபெறவுள்ளதுடன், 17ஆம் திகதி நீர்வெட்டுடன் திருவிழா நிறைவடையவுள்ளது.
மேலும், உகந்தைமலை ஸ்ரீ முருகனுக்கு 18ஆம் திகதி காலை 8 மணிக்கு சமுத்திர தீர்த்தோற்சவம் நடைபெற்று அன்று மாலை கொடியிறக்கம், திருக்கல்யாணம், திருப்பொன்னூஞ்சல் விழாவும் இடம்பெறவுள்ளன.
நன்றி- litharsan