கவிதை | ஒரு தந்தையின் தாலாட்டு | விமல் பரம்


 aq1

உன் வருகையால்,

நீண்டகால ஏக்கம்

நிமிடத்தில் பறந்ததே ……..

 

உன் சிரிப்பால்,

மனமெல்லாம் நெகிழ்ந்து

மகிழ்ச்சி பரவியதே ……..

 

உன் அழுகையால்,

தாங்காது மனமுடைந்து

தத்தளித்து தவிக்குதே ……..

 

உன் மழலையால்,

கேட்கும் ஓசையெல்லாம்

தேனாய்  காதில் பாயுதே ……..

 

உன் பார்வையால்,

துன்பம் துயரமெல்லாம்

தூரமாய் போனதே ……..

 

உன் அணைப்பால்,

உடல் சிலிர்த்து

உலகமே மறக்குதே ……..

 

என் வாழ்வுக்கு

அர்த்தம் தந்தவனே ……..

 

அப்பா  ஸ்தானத்தில்

என்னை அமரவைத்தவனே ……..

 

அழகன் முருகனாய்

என் இல்லம் வந்தவனே ……..

 

உனக்காக ……..  என் மகனுக்காக ……..

நான் சொல்வேன்

ஆண்டவனே உனக்கு

கோடி நன்றிகள்.

 

– விமல் பரம் –

 2 thoughts on “கவிதை | ஒரு தந்தையின் தாலாட்டு | விமல் பரம்

  1. சின்ன சின்ன சொற்களால் மிக எளிமையாக ஒரு தந்தையின் தாலாட்டை கவி வடிவில் வடிக்கப்பட்டிருக்கிறது. வாசிக்கும் போது மிகவும் இனிமையாக இருக்கிறது. எனக்கு பிடித்த வரிகள்… உன் பார்வையால், துன்பம் துயரமெல்லாம் தூரமாய் போனதே… என்பது. ஒரு தந்தையின் ஏக்கத்தை குழந்தையின் வரவு எத்தனை விதமான சந்தோஷத்தைக் கொடுக்கிறது என்பதை உணர்வு பூர்வமாகவும் அனுபவம் மூலமாகவும் கவி வரிகளை வடித்த விமல் பரம் அவர்களை இப்படி பட்ட மேலும் பல கவிதைகளை வாசகர்களுக்கு தர வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

  2. ஒரு தந்தையின் மன உணர்வை மிக எளிமையாகவும் அழகாகவும் சொல்லும் அழகுக் கவிதை.. விமல் பரமின் எழுத்துகள் வர வர மெருகேறிக் கொண்டே செல்கிறது. வாழ்த்துக்கள்..
    Superb…..அடுத்த வரவை எதிர்பார்த்துக் காத்திருக்கும் அன்பு வாசகர்கள்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *