கவிதை | தோழி | கயல்விழி


என் உயிர்த்  தோழி – நீ

என் விழியாய் இருந்தாய் அன்று..

 

பாசத்தைக் காட்டி என் மீது

நேசமாய் பழகினாய் என்றும்..

 

உன் அன்பில் உதிர்த்த வார்த்தையில்

மிக உச்சி குளிர்ந்தேன் நானும்..

 

கால ஓட்டம் வேகமாய் நகர – என்

வாழ்க்கை ஓடம் தள்ளாடி தளர்ந்தது

 

ஆசை கனவுகள் கலைந்து போக – என்

மனசு கனத்து கருமையாய் தெரிந்தது

 

என் உயிர்த் தோழி – நீ

என் விழியாய் இருந்தாய் அன்று..

 

இருட்டை பார்க்கும் என் விழியில் – இன்று

ஒளியை தர ஏன் மறந்தாய்…

 

உன் மனசை மதித்தேன் என்றும்

என் மனசை நீயேன் மிதித்தாய் இன்று..

 

பணம் இருந்த போது நட்பு

வறுமை வந்த போது வெறுப்பா…

 

சொல்….. என்னுயிர் தோழி..

எதனால் விலகினாய் எனை விட்டு…

 

நம் ஆழமான அன்பு போதாதா..

நம் நட்பு தொடர்ந்து செல்ல…

 

எதுவாயினும் சொல் என் தோழி..

புரிந்து கொள்வேன் எதனால் என்று……

 

 

dfr   கயல்விழி  | கனடாவிலிருந்து 

 

 

கயல்விழி  | கனடாவிலிருந்து 4 thoughts on “கவிதை | தோழி | கயல்விழி

  1. உயிர்த் தோழிக்கு, கவிதை மூலம் மடல் எழுதிய கயல்விழிக்கு ,
    மனத்துடிப்புடன் எழுதிய கவிதை எங்கள் மனதையும் தொட்டுவிட்டது.
    கருத்தும் எழுத்து நடையும் நன்றாகயிருக்கிறது. எதுவாயினும் சொல் புரிந்து கொள்வேன் என்று முடியும் போது எமக்குள்ளும் பதில் கிடைக்காதா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்திய உங்கள் கவிதைக்கு எங்கள் பாராட்டுக்கள்.

  2. ஹாய் கயல் விழி
    உங்கள் கவிதை மிகவும் அருமை. ஒரு அன்புத் தோழியின் பாராமுகத்தை மிகவும் உருக்கமாக கவிதையில் வடித்துள்ளீர்கள். கவிதைக்காக பிரசுரித்த முகப்புப் படம் மிகப் பொருத்தமாக இருக்கின்றது.

  3. எளிமையான இயல்பான கவிதை சின்னச் சின்னச் சொற்களால் செதுக்கி எழுதப் பட்ட வரிகள் நெஞ்சில் நிற்கிறது கவிதையின் நடை அருமை அதனிலும் அந்தக் கடைசி வரிகள்- எதுவாயினும் சொல் புரிந்து கொள்வேன் எதனால் என்று…..ஆஹா.. அருமையிலும் அருமை.. கவிதைக் களம் தொடர வாழ்த்துக்கள்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *