பார்த்திபன் சீதா தம்பதிகளின் மகள் கீர்த்தனாவுக்கும், பிரபல ஒளிப்பதிவாளர் ஸ்ரீகர் பிரசாத் மகன் அக்ஷய்க்கும் அண்ணாமலைபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் திருமணம் நடந்தது.
திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மற்றும் திரையுலகப் பிரபலங்கள் பலரும் பங்கேற்றுள்ளனர்.
கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தேசிய விருது பெற்ற கீர்த்தனா தற்போது மணிரத்னம் இயக்கும் படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறார். விரைவில் புதிய படத்தை இயக்க இருக்கிறார்.