கிளி பீப்பிளால் மட்டக்களப்பிலும் மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள்


கிளி பீப்பிள் அமைப்பினால் திருகோணமலை மட்டக்களப்பு மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்படும் நிகழ்வுகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கிளி பீப்பிள் அமைப்பு தமிழர் தாயகத்தில் பாடசாலை மாணவர்களுக்கு 1001 துவிச்சக்கர வண்டிகள் வழங்கும் நிகழ்வினை முன்னெடுத்து வருகின்றது.

 இன்று காலை திருகோனமலை கும்புறுப்பிட்டி, மூதூர் கிளிவெட்டி பிரதேச மாணவர்களுக்கு வழங்கப்பட்டு தற்போது மட்டக்களப்பு வாகரைப் பகுதியில் வழங்கப்படுகின்றது.

இந்த நிகழ்வில் கிளி மக்கள் அமைப்பின் தலைவர் வைத்திய நிபுனர் சாதனந்தன், சர்வதேச இனைப்பாளர் வைத்தியர் மதியழகன், யாழ் வைத்தியசாலை பணிப்பாளர் மண்ணின் மைந்தன் வைத்தியர் சத்தியமூர்த்தி, வைத்தியர் ஜெயராசா, கள உத்தியோகத்தர் சந்திரமோகன் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பின் 1001 துவிச்சக்கர வண்டிகள் திட்டத்தின் கீழ் கிளிநொச்சி மாவட்டத்துக்கு 651 துவிச்சக்கர வண்டிகளும் ஏனைய வடகிழக்கு மாகாணங்களுக்கு 50 துவிச்சக்கர வண்டிகளும் கட்டம் கட்டமாக வழங்கப்படுகின்றது.

கட்டம் – 12

12 வது கட்டமாக திருகோணமலை  மாவட்ட கும்பிறுப்பிட்டி, கிளிவெட்டி, மூதூர் போன்ற பிரதேசங்களில் உள்ள தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு  50 துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட உள்ளது. 17/08/19 அன்று இந்த நிகழ்வு கும்பிறுப்பிட்டி மெதடிஸ் தமிழ் பாடசாலை மற்றும் மூதூர் பாரதிபுரம் வித்தியாலயம், கிளிவெட்டி ஆகிய இடங்களில் நடைபெறும்.

கட்டம் – 13 : வாகரைமட்டக்களப்பு மாவட்டம்

13 வது கட்டமாக  மட்டக்களப்பு மாவட்டம்  வாகரையில் பனிச்சங்கேணி திருமகள் வித்தியாலயத்தில் 17/08/2019 காலை 9 மணிக்கு ஒரு தொகுதி வழங்கப்பட உள்ளது.

கட்டம் – 14 : வாழைச்சேனை / மட்டக்களப்பு மாவட்டம்  
வாழைச்சேனையில் உள்ள சந்திவெளி சித்திவிநாயகர் வித்தியாலயத்தில் 18/08/2019  காலை 9 மணிக்கு ஒரு தொகுதி வழங்கப்பட உள்ளது.
கட்டம் – 15 : செங்கலடி  / மட்டக்களப்பு மாவட்டம்
செங்கலடி மத்திய மகா வித்தியாலயத்தில் 18/08/2019 காலை 11 மணிக்கு மீதி துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட உள்ளது.

கட்டம் – 16 : அக்கரைப்பற்று / அம்பாறை மாவட்டம்

அக்கரைப்பற்று கண்ணகி வித்தியாலயத்தில் 18/08/2019 மாலை 2 மணிக்கு ஒரு தொகுதி வழங்கப்பட உள்ளது.

கட்டம் – 17 : திருக்கோவில் / அம்பாறை மாவட்டம்

திருக்கோவில் பிரதேசத்தில் உள்ள கஞ்சிகுடிச்சாறு கணேஷ் வித்தியாலயத்தில் 18/08/2019 மாலை 4 மணிக்கு மிகுதி துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட உள்ளது.

கிளி மக்கள் அமைப்பின் 1001 துவிச்சக்கர வண்டிகள் திட்டத்தின் கீழ் பின்வருமாறு துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்படுகின்றது;

வழங்கப்பட்டவை

கிளிநொச்சி –  651

மன்னார் – 50

முல்லைத்தீவு – 50

யாழ்ப்பாணம் – 60

திருகோணமலை – 50

விரைவில் வழங்கப்பட உள்ள மாவட்டங்கள்;

வவுனியா – 50

மட்டக்களப்பு – 50

அம்பாறை – 50

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *