கிளிநொச்சியில் இன்று அதிகாலை விபத்து : ஆணொருவர் பலி.


கிளிநொச்சி 155ம் கட்டை பகுதியில் இன்று அதிகாலை விபத்து. கொழும்பிலிருந்து யாழ் நோக்கி பயணித்த புகையிரதம் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதே பகுதியிலேயே கடந்த 25ம் திகதி இடம்பெற்ற விபத்தில் 6 படையினர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *