விடுதலைப் புலிகளின் முக்கிய ஆவணங்கள் தேடுதல்; கிடைத்தது என்ன? படங்கள் இணைப்பு


விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்டதாக கூறப்படும் முக்கிய ஆவணங்கள், பெறுமதியான பொருட்கள் காணப்படலாம் என கடற்படையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து குறித்த பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் நீதவான், கண்டாவளை பிரதேச செயலகம் மற்றும் கிராம சேவையாளர் ஆகியோர் முன்னிலையில் கடற்படையினரால் குறித்த அகழ்வுப் பணிகள் முன்னடுக்கப்பட்டன.

எனினும் குறித்த தேடுதலில் எவையும் கிடைக்காத அகழ்வுப் பணிகள் கைவிடப்பட்டன.

விடுதலைப்புலிகளின் முக்கிய ஆவணங்களை தேடி கிளிநொச்சியில் அகழ்வு

கிளிநொச்சி- சிவபுரம் பகுதியில் விடுதலைப்புலிகளினால் புதைக்கப்பட்டதாக கூறப்படுகின்ற  முக்கிய ஆவணங்கள் மற்றும் பெறுமதிமிக்க பொருட்களைத் தேடி அகழ்வும் பணிகள்  ஆரம்பமாகியுள்ளன.

குறித்த பணிகள், கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதிபதி த.சரவணராஜா முன்னிலையில் கடற்படையினர், இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் ஆகியோர் தற்போது முன்னெடுத்துள்ளனர்.

இந்த சம்பவத்தினை பார்வையிடுவதற்கு அப்பிரதேச மக்கள் குவிந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் நடைபெற்ற இறுதி யுத்தத்தின் போது, விடுதலைப்புலியினர், தங்களின் முக்கிய ஆவணங்கள், மற்றும் பெறுமதியான தங்க ஆபரணங்கள் ஆகியவற்றை சிவபுரம் பகுதியில் புதைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆகையால் இதற்கு முன்னரும் இத்தகையதொரு அகழ்வு பணியில் இராணுவத்தினர் ஈடுபட்டனர். ஆனால் எந்ததொரு பொருட்களும் கிடைக்காமல் ஏமாற்றமடைந்திருந்தனர்.

இந்நிலையில் புதைக்கப்பட்டதாக கூறப்படுகின்ற ஆவணங்கள், ஆபரணங்கள் ஆகியவற்றைத் தேடி மீண்டும் அகழ்வு பணியினை இராணுவத்தினர் தற்போது முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *