காணாமல் ஆக்கப்பட்ட அலுவலகத்தை தாம் நம்பவில்லை!


கிளிநொச்சியில் அமைந்துள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இதன்போது வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத்தின் செயலாளர் லீலாவதி ஆனந்தநடராஜா இதன்போது ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்தார்.

கடந்த 16ம் திகதி கொழும்பில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் அலுவலகம் திறந்துள்ளமை தொடர்பில் அவர் கருத்து தெரிவித்தார்.

அன்றய தினம் குறித்த அலுவலகத்தின் ஆணையாளரை சந்தித்த விடயங்கள் தொடர்பிலும் அவர் குறிப்பிட்டார்.

காணாமல் ஆக்கப்பட்ட அலுவலகத்தை தாம் நம்பவில்லை எனவும், அதன் ஊடாக வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் செய்யப்பட்டவர்கள் தொடர்பில் அதிகளவான சாட்சிகளை கொண்ட நபர்கள் சார்பில் வழக்கு ஒன்றை மேற்கொண்டு, அதன் ஊடாக நல்ல தீர்வொன்றை பெற்று தந்தால் தாம் குறித்த அலுவலகத்தை நம்புவதாக அவர்களினடம் தெரிவித்ததாகவும் குறிப்பிட்டார்.

விரைவில் அவ்வாறான நடவடிக்கை ஒன்றை எடுப்பதாக அவர் தம்மிடம் குறிப்பிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை தொடர்ந்து அமைச்சர் மனோ கணேசனை சந்தித்ததாகவும், அவரிடம் இரகசய முகாம்கள் இருப்பது தொடர்பில் தெரிவித்ததாகவும் அவர் ஊடக சந்திப்பில் தெரிவித்தார். இதேவேளை காணாமல் ஆக்க்க்பட்டவர்களின் உறவுகளிற்கு மாதாந்தம் 6000 வழங்குவது என்பது போராட்டத்தை பலவீனப்படுத்தும் செயல் எனவும், அதனை கட்டாயமாக வழங்க கூடாது என தாம் வலியுறுத்தியதாகவும் தெரிவித்தார்.

குறித்த பணத்தினை கட்டாயப்படுத்தி வழங்க மாட்டோம் என அமைச்சர் இதன்போது வாக்குறுதி அளித்ததாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *