ஆன்மீக உற்சவத்தில் ஒளிவீச இருக்கும் கோவை நகரம்!


புத்தாண்டை ஆன்ம ஒளியுடன் வரவேற்கும் வகையில், கோவை ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் அருள் நிறைந்தன ஆன்மீக உற்சவத்தை நடத்த இருக்கிறது. வருடம் தோறும் நிகழும் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ், வழங்கும் “எப்போ வருவாரோ” 2019 என்ற ஆன்மீக உற்சவம், மீண்டும் ஒருமுறை ஆன்மத் தேடலில் நம்மை செலுத்த உள்ளது.

இந்த நிகழ்வு பதின்மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. வருகிற 2019 ஜனவரி 1 லிருந்து ஜனவரி 10 வரை உள்ள பத்து நாட்கள், கோவை கிக்கானி மேல்நிலைப் பள்ளியின் சரோஜினி நடராஜ் அரங்கில் மாலை 6 மணி அளவில் இந்த அருள்நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

இந்நிகழ்வில், ஆன்றோர்கள் பலர் பக்தியில் சிறந்த அருட்பெரியோர்களைப் பற்றி தினசரி உரையாற்ற இருக்கின்றனர். நாளொன்றுக்கு ஒரு அருளாளர் வீதம் பத்து நாட்கள் தொடர்ந்து பக்தி உரைகள் நிகழ உள்ளன. அவ்வகையில், முதல் நாளான ஜனவரி 1,2019 செவ்வாய் கிழமை ஆன்மீகப் பேச்சாளர் சுகிசிவம், திருவள்ளுவர் குறித்து உரையாற்றுகிறார்.

ஜனவரி 2 புதன் கிழமை, 96 வயது இமயமலை துறவியான ஸ்ரீ ஸ்ரீ ஷண்முகானந்தா சுவாமிகள், வள்ளலார் பற்றி உரையாற்றுகிறார். முனைவர் பழ,முத்தப்பன் வியாழக்கிழமை ஜனவரி 3, மெய்கண்டார் குறித்து உரையாற்றுகிறார். தொடரும் ஜனவரி 4 வெள்ளிக்கிழமை அன்று எழுத்தாளர் இந்திரா சௌந்திரராயன் காஞ்சி மகாபெரியவர் குறித்து உரை வழங்க இருக்கிறார்.

அடுத்ததாக ஜனவரி 5 சனிக்கிழமை, முனைவர் பிரணதார்த்திஹரன் அவர்கள் பாரதியார் குறித்து தன் சொற்பொழிவை வழங்க உள்ளார். ஜனவரி 6 ஞாயிறன்று பூஜ்ய ஸ்ரீசுவாமி ஓங்காரானந்தா, வியாசர் குறித்து அருளுரை ஆற்றுகிறார்.

மேலும், ஜனவரி 7, திங்களன்று கிருஷ்ணா அவர்கள், ரமண மகரிஷி குறித்து உரையாற்றுகிறார். செவ்வாய்க்கிழமை ஜனவரி 8 அன்று பாலாஜி பாகவதர், ஞானானந்த கிரி குறித்து பேசுகிறார். புதன்கிழமை ஜனவரி 9, சொ.சொ.மீ.சுந்தரம் குமரகுருபரர் பற்றி உரையாற்றுகிறார்.

நிறைவு நாளான ஜனவரி 10 வியாழக்கிழமையன்று, மரபின் மைந்தன் முத்தையா பட்டினத்தடிகள் பற்றி உரை வழங்க இருக்கிறார். அத்துடன், ஆன்ம தேடலில் விடையாக விளங்கும் இந்த அருள்நிகழ்வில் கலந்துகொள்ள அனைவருக்கும் அனுமதி இலவசம் என தெரிவிக்கப்படுகிறது.

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *