கோவையில் ஓடும் காரிலிருந்து மனைவியைக் கீழே தள்ளிய கணவன்!


திருமணமான பதினோரு வருடங்களுக்குப் பிறகு, ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தனது மனைவியை ஓடும் காரிலிருந்து கணவனே கீழே தள்ளி கொலை செய்ய முயன்ற சி.சி.டி.வி காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.”

கோவை துடியலூரை அடுத்து உள்ள தொப்பம்பட்டி குருடம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஆர்த்தி. சென்னையைச் சேர்ந்தவர் அருண் ஜூடு அமல்ராஜ்.

இருவருக்கும் திருமணமாகி பதினோரு வருடங்கள் ஆகின்றன. இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கிறார்கள். கடந்த மே மாதம், கோவையிலிருந்து சென்னைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி ஆர்த்தியை காரில் ஏற்றிச்சென்றுள்ளார் அருண்.

“ கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆர்த்தியும் அருணும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர்.

 

காரிலிருந்து ஆர்த்தி கீழே தள்ளப்படும் காட்சிகள் அப்பகுதியில், பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவாகி உள்ளது. காரிலிருந்து கீழே விழுந்ததில் காயமடைந்த ஆர்த்தி போலீஸில் புகார் அளித்துள்ளார்.

நன்றி -news7tamil



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *