கோயம்புத்தூர் புத்தகத் திருவிழா 2019 கட்டுரைப் போட்டி.


கொடிசியா மற்றும் கோவை ரோட்டரி அமைப்புகள் இணைந்து நடத்தும் ‘கோயம்புத்தூர் புத்தகத் திருவிழா 2019 கட்டுரைப் போட்டி

கோயம்புத்தூர் மாவட்ட சிறுதொழில்கள் கூட்டமைப்பான கொடிசியா கடந்த 2015- ஆம் ஆண்டு முதல் கோயம்புத்தூர் புத்தகத் திருவிழாவினை நடத்தி வருகிறது.

இந்த ஆண்டிற்கான புத்தகத் திருவிழா வரும் ஜூலை 19 முதல் 28-ம் தேதி வரை கொடிசியா அரங்கில் நடைபெற உள்ளது.

கோவையின் பண்பாட்டு அடையாளங்களுள் ஒன்றாக புத்தக வாசிப்பை உருவாக்கவேண்டுமென்பதற்காக எவ்வித லாப நோக்கங்களும் இல்லாமல் நடத்தப்படும் இந்தப் புத்தகத் திருவிழாவில் நூற்றுக்கணக்கான அரங்குகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள் தள்ளுபடி விலையில் கிடைக்கும்.

தினமும் மாலைவேளைகளில் கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தாகும் ஏராளமான கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

இலக்கியக் கூடல் அமைப்பின் சார்பாக எழுத்தாளர் வாசகர்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அறிவுக்கேணி அமைப்பின் சார்பாக பள்ளி கல்லூரிகளில் வாசிப்பின் அவசியம் குறித்த தொடர் சொற்பொழிவுகளும் நடைபெற்று வருகின்றன.

கட்டுரைப்போட்டி

கோயம்புத்தூர் புத்தகத் திருவிழாவினை பள்ளி மாணவர்கள் மத்தியில் பிரபலப்படுத்தும் வகையில் மாபெரும் கட்டுரைப் போட்டி ஒன்றினை கோயம்புத்தூரின் ரோட்டரி சங்கங்களுடன் இணைந்து அறிவித்துள்ளது.

அதன்படி கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளிகளில் 8 முதல் 11 வரையிலான வகுப்புகளில் பயிலும் மாணவர்கள் ‘என்னை ஈர்த்த புத்தகம்’ அல்லது ‘வழிகாட்டும் காந்தி’ எனும் தலைப்பில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்து 3 முதல் 6 பக்கங்கள் வரையிலான கட்டுரையை எழுதி கொடிசியா சிட்டி அலுவலகத்திற்கு வரும் ஜூலை 5-ஆம் தேதிக்குள் அனுப்பிவைக்கவேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு கொடிசியா புத்தகத் திருவிழா அரங்கில் பிரபல எழுத்தாளுமைகளின் கரங்களால் பரிசும் சான்றிதழ்களும் வழங்கப்படும். போட்டி குறித்த மேலும் விபரங்களுக்கு www.cbf.codissia.com இணையதளத்தை பார்வையிடலாம். மூன்று லட்சம் ரூபாய் மதிப்பிலான பரிசுகள் மாணவர்களுக்கு வழங்கப்பட இருக்கிறது.

மாணவர்களின் மத்தியில் புத்தக வாசிப்பை ஊக்குவிப்பதும், மகத்தான ஆளுமைகளைப் பற்றி சிந்திக்கத் தூண்டுவதும், கருத்துக்களைத் தொகுத்து வெளிப்படுத்த ஒரு களம் அமைத்து கொடுப்பதுமே இந்தக் கட்டுரைப் போட்டியின் ஆதார நோக்கங்கள்.

இந்த முயற்சிக்கு கோயம்புத்தூரின் பள்ளிகளும், ஆசிரியர்களும், பெற்றோர்களும், மாணவர்களும் பெரிய அளவில் ஒத்துழைப்பை நல்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் விபரங்களுக்கு 7502722000Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *