பெண்கள் குங்குமம் வைப்பதற்கு பின்னால் இவ்வளவு நன்மைகளா..?


திருமணம் ஆன பெண்களை எளிதில் அடையாளம் காண சில பொருட்கள் அனைவருக்கும் உதவும். அந்த வகையில் பெண்கள் அணிந்திருக்கும் தாலி, மெட்டி, நெற்றி வகுட்டில் வைக்கும் குங்குமம் என திருமணம் ஆன பெண்களுக்கு என்றே சில பிரத்யேக அடையாளங்கள் அவர்களிடம் வெளிப்படும்.  இவற்றில் தாலி, மெட்டி கூட பலபேர் வெளியே தெரியாதவாறு உடைகளை தேர்வு செய்கிறார்கள். அந்த வகையில் திருமணம் ஆனவர்களை எளிதில் கண்டறியும் பொருளாக இருப்பது பெண்கள் நெற்றியில் வைக்கும் குங்குமம். அதனை வைத்தே பெண்கள் திருமணம் ஆனவரா? இல்லையா? என்பதை எளிதில் கண்டறியலாம்.

xfd

இந்நிலையில், அந்த குங்குமத்திற்கு பின்னால் மிக பெரிய செய்தி ஒன்று சொல்லப்படுகிறது. பெண்கள் நெற்றியில் குங்குமம் வைப்பதால் பெண்களின் கருப்பை வலுவடைவதாகவும், இதனால் தான் திருமணம் முடிந்த பெண்களை நெற்றியின் வகுட்டில் பொட்டு வைக்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது. மேலும் நெற்றியில் உள்ள பிட்யூட்டரி நரம்புகளை தூண்டுவதன் மூலம் குழந்தை பேறு உடனடியாக கிடைக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

நன்றி : நக்கீரன்Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *