புதிய லக்கல நகரம் ஜனாதிபதியால் மக்களிடம் கையளிப்பு!


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதியாக பதவியேற்று இன்றுடன் 4 ஆண்டுகள் பூர்த்தியடைந்துள்ளன.

இதனை முன்னிட்டு, மொரகஹகந்த, களுகங்கை நீர்த்தேக்கத்தால் காணிகளை இழந்த மக்களுக்காக அமைக்கப்பட்ட புதிய லக்கல நகரம் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் மக்களிடம் கையளிக்கப்பட்டது.

4500 மில்லியன் ரூபா செலவில் புதிய லக்கல நகரம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

75 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள புதிய நகரில் பொலிஸ் நிலையம், கூட்டுறவு மண்டபம், புதிய சுகாதார நிலையங்கள், விளையாட்டு மைதானம், பிரதேசசபை கட்டடம் உள்ளிட்ட 112 கட்டடங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனைத்தவிர 26 அரச நிறுவனங்களும் புதிய லக்கல நகரில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.

 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *