முன்னாள் உலகழகி ஐஸ்வர்யாராய் மீண்டும் கர்ப்பமா..??


பாலிவுட் நடிகையும் முன்னாள் உலக அழகியுமான ஐஸ்வர்யா ராய் மீண்டும் கர்ப்பம் ஆகியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நடிகை ஐஸ்வர்யா ராய், நடிகர் அமிதாப்பச்சனின் மகன், நடிகர் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தான் ஒரு பெண் குழந்தைப் பிறந்தது. அக்குழந்தைக்கு “ஆரத்யா” எனப் பெயரிட்டுள்ளனர். குழந்தைப் பிறந்த பிறகு ஐஸ்வர்யாராய் சினிமாவில் நடிக்கவில்லை. ஒருசில விளம்பரப்படங்களில் மட்டும் நடித்தார்.

எனவே, அவரை மீண்டும் சினிமாவில் நடிக்கும்படி தினமும் பல இயக்குனர்கள் ஐஸ்வர்யா வீட்டு கதவை தட்டினர். ஆனால் அவற்றில் யாருக்கு ஐஸ்வர்யா செவி சாய்க்கவில்லை. இதனிடையே மணிரத்னம் தெலுங்கு மற்றும் தமிழில் எடுக்கும் படத்தில் ஐஸ்வர்யாராய் நடிக்கப் போவதாக செய்திகள் வெளிவந்தன. இதனால் ஐஸ்வர்யாராய் மீண்டும் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில்தான் அவர் மீண்டும் கர்ப்பமாகி இருப்பதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் மும்பையில் நடந்த தேர்தலின்போது வாக்களிக்க வந்த ஐஸ்வர்யாராயை புகைப்பட கலைஞர்கள் புகைப்படம் எடுத்தனர். அப்போது அவர் கர்ப்பம் உண்டானதுபோல் அவருடைய வயிறு பெரிதாக காணப்பட்டதாக செய்திகள் வெளியிட்டு உள்ளன. ஆனால் அமிதாப்பச்சன் குடும்பம் இதுவரை ஐஸ்வர்யாராய் இரண்டாவதாக கர்ப்பம் அடைந்ததாக உறுதிப்படுத்தவில்லை.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *