மெஸ்ஸியின் புதிய உலக சாதனை!


ஸ்பெயினில் நடைபெறும் பிரபல கழக அணிகளுக்கிடையிலான லா லிகா கால்பந்து தொடரில், விளையாடும் முன்னணி அணிகளில் பார்சிலோனா அணியும் ஒன்று, இந்த அணிக்காக விளையாடிவரும் அர்ஜெண்டினா கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி, இந்த தொடரில் 400 கோல்கள் அடித்து சாதனை படைத்துள்ளார்.

எய்பர் அணியுடன் நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில், பார்சிலோனா அணி 3-0 என்ற கோல்கள் கணக்கில் அபாரமாக வெற்றி பெற்றது. லா லிகா கால்பந்து தொடரில், அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில், கிறிஸ்டியானோ ரொனால்டோ இரண்டாவது இடத்தில் உள்ளார்.

அத்தோடு, ஐரோப்பிய நாடுகளில் நடைபெறும் முன்னணி ஐந்து லீக் தொடரில், ஒரே தொடரில் 400 கோல்களை அடித்த முதல் வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.

 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − 12 =