5ஆவது தடவையாகவும் தங்கக்காலணி விருதை சுவீகரித்த லயனல் மெஸி!


ஐரோப்பாவின் அதிசிறந்த கால்பந்தாட்ட வீரருக்கான தங்கக்காலணி விருதை, ஆர்ஜென்டீனாவின் நட்சத்திர வீரரான லயனல் மெஸி ஐந்தாவது தடவையாகவும் சுவீகரித்தார்.

இதன்மூலம் அதிக தடவைகள் இந்த விருதை வென்ற வீரராக லயனல் மெஸி வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.

ஐரோப்பாவில் சிறந்த கால்பந்தாட்ட வீரருக்கான தங்கக்காலணி விருதை போர்த்துக்கலின் கிறிஸ்டியானோ ரொனால்டோவும் ஆர்ஜென்டீனாவின் லயனல் மெஸியும் தலா 4 தடவைகள் வென்றிருந்தனர்.

இந்தநிலையில், இவ்வருட விருதை லயனல் மெஸி தன்வசப்படுத்தி அதிக தடவைகள் அந்த விருதை வென்றவராக வரலாற்றில் பதிவானார்.

 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *