விரைவில் திரைக்கு வரவுள்ள நயன்தாராவின்  “லவ் ஆக்ஷன் டிராமா”


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை நயன்தாராவின் புதிய திரைப்படமான “லவ் ஆக்ஷன் டிராமா” திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளன.

தயான் ஸ்ரீனிவாசன் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் நடிகர் நிவின்பாலிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.

அத்துடன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த திரைப்படத்தில், ஜமோன் ஜான் மற்றும் வர்கீஸ் ராஜ் ஆகியோர் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த திரைப்படம் ஓணம் திருவிழாவின் போது வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *