வெளியே இதயத்துடன் பிறந்து உயிருக்குப் போராடும் குழந்தை


உத்தரபிரதேசம் மாநிலத்தில் ஒரு குழந்தைக்கு இதயம் மார்புக்கு வெளியே உள்ளது. இந்த குழந்தையின் உயிரை காப்பாற்ற டாக்டர்கள் போராடி வருகின்றனர்.

உத்தரபிரதேசத்தில் நிர்பாய் பால்- பிரியங்கா என்ற தம்பதியினருக்கு கடந்த புதன்கிழமை ஒரு ஆண் குழந்தை பிறந்தது. பிறந்தவுடன் அந்த குழந்தையை பார்த்த மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். காரணம் குழந்தைக்கு இதயம் மார்புக்கு வெளியே இருந்தது. கடந்த ஆறு நாட்களாக அந்த குழந்தையின் உயிரைக் காப்பாற்ற மருத்துவர்கள் போராடி வருகின்றனர். மிகவும் வறுமை நிலையில் உள்ள அந்த குழந்தையின் பெற்றோர், தங்கள் குழந்தையை காப்பாற்ற நிதியுதவி செய்யும்படி அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இந்த குழந்தையின் இதயத்தை அறுவை சிகிச்சை செய்து உள்ளே வைக்க ஒரு மில்லியன் ரூபாய்க்கும் அதிகமாக செலவாகும் என்று கூறப்படுகிறது. ஆனால் தினசரி ரூ.180 மட்டுமே வருமானம் பெற்று வரும் இந்த குழந்தையின் பெற்றோர் எப்படி இந்த அறுவை சிகிச்சையை செய்ய முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

குழந்தை தாயின் கருவில் இருக்கும்போது Ectopia cordis என்ற நோயால் தாக்கப்படும் போது இவ்வாறு வெளியே இதயம் இருக்கும்படி பிறக்கும் என்றும், இந்த நோய் 10 லட்சம் குழந்தைக்கு ஒரு குழந்தை என்ற வீதத்தில் பிறக்கும் என்றும் கூறப்படுகிறது. பொதுவாக இதுபோன்று பிறக்கும் குழந்தை மூன்று நாட்களுக்கு மேல் உயிருடன் இருந்ததில்லை.

இந்த குழந்தையை காப்பாற்ற டிரஸ்ட் மூலம் நிதிதிரட்ட ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

Baby Born With Heart Protruding From His Chest In IndiaLeave a Reply

Your email address will not be published. Required fields are marked *