காதலிக்காக தாடி வளர்க்கும் இளவரசர் ஹாரி: ராணி எலிசபெத் கண்டிப்பு


 

காதலிக்காக இளவரசர் ஹாரி தாடி வளர்க்கிறார். ஆனால் அதை அகற்ற ராணி எலிசபெத் உத்தரவிட்டுள்ளார்.

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்– டயானா தம்பதியின் 2–வது மகன் இளவரசன் ஹாரி (வயது 29). இவர் இங்கிலாந்து விமான படையில் அப்பாச்சி ஹெலிகாப்டர் விமானி ஆக பணிபுரிகிறார்.

துணிச்சலான செயல்களில் ஈடுபடுவதில் மிகவும் ஆர்வம் உள்ளார். சமீபத்தில் ஆண்டார்டிகாவில் பனி படர்ந்த தென் பகுதிக்கு சென்று சாகசம் புரிந்தார்.

தற்போது இவர் ஸ்டைல் ஆக முகத்தில் சிறிய அளவில் தாடி வளர்க்கிறார். இது இங்கிலாந்து பத்திரிகைகளில் படத்துடன் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

அதைத்தொடர்ந்து இந்த விவகாரம் அவரது பாட்டி ராணி எலிசபெத் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. உடனே அவர் இளவரசர் ஹாரி தனது தாடியை சவரம் செய்து அகற்ற வேண்டும் என உத்தரவிட்டார்.

ஆனால் தாடியை உடனே அகற்ற இளவரசர் ஹாரி மறுத்துவிட்டார். ஏனெனில் இவர் கிரசிடா போனாஸ் என்ற பெண்ணை காதலிக்கிறார்.

அவரது விருப்படியே தாடி வளர்ப்பதாக தெரிகிறது. தனது பாட்டியின் உத்தரவை ஏற்றுக் கொள்வதாக கூறியுள்ள ஹாரி தனது காதலி பார்த்த பிறகே தாடியை அகற்றுவேன் என கண்டிப்பாக தெரிவித்துவிட்டார்Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *