ஆண்கள் விரும்பும் புத்திசாலி பெண்கள்


இவ்வுலகில் ஒவ்வொருக்குமே தனக்கு துணையாக வருபவர் இப்படி இருக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பு இருக்கும். அதில் பெண்களுக்கு தான் எதிர்பார்ப்புக்கள் அதிகம் இருக்கும் என்று பலர்
நினைக்கின்றனர். ஆனால் ஆண்களுக்கும் தனக்கு துணையாக வரும் பெண் இத்தகைய குணத்துடன் இருக்க வேண்டுமென்று ஆசைப்படுவார்கள்.

4169f658-a8e5-4724-9e85-1f08015cdba7_S_secvpf

எதிர்பார்ப்புக்கள் இல்லாவிட்டால், வாழ்க்கையில் எந்த ஒரு சுவாரஸ்யமும் இருக்காது. மேலும் தன் துணையின் எதிர்பார்ப்பு புரிந்தும், அந்த எதிர்பார்ப்பிற்கு ஏற்றவாறு நடக்காமல் இருந்தால், உண்மையில் அந்த உறவில் எந்த ஒரு சந்தோஷமும் சுவாரஸ்யமும் இருக்காது.

சில பெண்கள் தங்களது துணையின் நண்பர்களுடன் சகஜமாக பேசமாட்டார்கள். ஆனால் அப்படி இருப்பது ஆண்களுக்கு பிடிக்காது. நன்கு சந்தோஷமாக, அவர்களது நண்பர்களுடன் பேசி, துணைக்கு ஒரு நல்ல தோழியாக இருக்கும் பெண்களைத் தான் ஆண்களுக்குப் பிடிக்கும்.

தற்போதைய ஆண்கள் தனக்கு துணையாக வரும் பெண் எப்பொழுதும் தன்னை சார்ந்து இல்லாமல் இருக்க வேண்டும் என்று நினைப்பர். இப்படி இருப்பதால், பெண்கள் மிகவும் தைரியமானவர்களாகவும், எந்த கஷ்டத்தையும் தாங்கி எதிர்த்து வாழ்பவர்களாகவும் இருப்பார்கள் என்பதால் தான். ஆண்கள் தைரியமான மற்றும் தன்னம்பிக்கையுடன் செயல்படும் பெண்களை அதிகம் விரும்புவார்கள்.

எப்போதும் நச்சரித்துக் கொண்டே இருக்கும் பெண்களைக் கண்டால், ஆண்கள் ஓடிவிடுவார்கள். ஆகவே எந்த ஒரு விஷயத்திற்கும் அவர்களை நச்சரிக்காமல் இருக்கும் பெண்களைத் தான் ஆண்கள் விரும்புவார்கள்.

எவ்வளவு தான் அகம் அழகாக இருந்தாலும், கொஞ்சம் புற அழகும் வேண்டுமல்லவா? எனவே அழகை சரியாக பராமரித்து வரும் பெண்களையும் ஆண்கள் விரும்புவார்கள். அதிலும் நீங்கள் கொஞ்சம் மற்றவர்கள் சைட் அடிக்கும் வகையில் சூப்பர் பிகர் போன்று காணப்பட்டால், அவர்கள் உங்களை பெற்றதற்கு மகிழ்ச்சியாக இருப்பதுடன், பெருமையாகவும் உணர்வார்கள்.

காதலன் எப்போதும் நான் சொல்வதைத் தான் கேட்க வேண்டும் என்று எண்ணாமல், காதலனை அவர்கள் போக்கில் விடும் பெண்களையும் ஆண்களுக்கு பிடிக்கும். ஏனெனில் உறவில் கொஞ்சம் சுதந்திரம் இருந்தால் தான், அந்த உறவு ஆரோக்கியமாக இருக்கும்.

புத்திசாலித்தனத்துடன் செயல்படும் பெண்களை ஆண்கள் அதிகம் விரும்புவார்கள். ஏனெனில் இத்தகைய பெண்களால் எத்தகைய சூழ்நிலையையும் சமாளித்து வெளிவருவார்கள். மேலும் சில ஆண்கள் தான் சொல்வது தான் சரி என்று இருப்பார்கள். அத்தகைய ஆண்களை புத்திசாலித்தனமான பெண்கள் எளிதில் மாற்றுவார்கள்.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *