2.5 லட்சம் ஆசிரியர்களுக்கு பயிற்சியளிக்க புதிய திட்டம்


பெருகி வரும் மக்கள்தொகையின் விளைவாக அடுத்த 20 ஆண்டுகளில் உலக அளவில் சுமார் 7 மில்லியன் ஆசிரியர்கள் தேவைப்படுவார்கள் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

2f796759-6740-48cd-9544-e180138278a9_S_secvpf-1இந்நிலையில், ஐ.நா.வின் அமைப்பான யுனெஸ்கோ சமீபத்தில் வெளியிட்ட தனது அறிக்கையில், உலகம் முழுவதும் 57 மில்லியன் ஆரம்ப பள்ளி குழந்தைகள் படிப்பை இடைநிறுத்திவிட்டதாக தெரிவித்துள்ளது. ஆசிரியர்களின் திறமையின்மையும் இதற்கு காரணமாக உள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து, வகுப்பறை கல்வி பயிற்றுவிக்கும் தரத்தை உயர்த்துவதற்காக அடுத்த 10 ஆண்டுகளில் 2,50,000 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கும் புதிய திட்டத்தில் வெளிநாடு வாழ் இந்தியரின் சர்வதேச கல்வி நிறுவனம் ஒன்று துபாயைச் சேர்ந்த துபாய் கேர் அமைப்புடன் கையெழுத்திட்டுள்ளது.
இரண்டாவது பன்னாட்டு கல்வி மற்றும் திறன்களின் மாநாடு துபாயில் நடைபெற்றது. அதில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *