சூரியக்குளியலில் ஈடுபட்டிருந்த முன்னாள் ஒலிம்பிக் வீராங்கனை மர்ம மரணம்


பிரிட்டன் நாட்டை சேர்ந்த 58 வயது முன்னாள் ஒலிம்பிக் வீராங்கனை ஒருவர் தனது வீட்டின் பின்புறத்தில் டாப்லெஸ்ஸாக சூரியக்குளியலில் ஈடுபட்டிருந்தபோது திடீரென மரணம் அடைந்தார். இதனால் அவருடைய கணவர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

முன்னாள் அத்லெட்டிக் ஒலிம்பிக் வீராங்கனை  Donna Hartley-Wass என்ற பிரிட்டன் நாட்டை சேர்ந்த 58 வயது பெண், நேற்று தனது வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் கணவருடன் சூரியக்குளியலில் ஈடுபட்டிருந்தார். அந்த வேளையில் அவர் டாப்லெஸ்ஸாக இருந்ததாக கூறப்படுகிறது. சூரியக்குளியலின் நடுவே திடீரென அவருக்கு உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டு திடீரென அவரது மூச்சு நின்றுவிட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது கணவர், உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றும், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

பிரேத பரிசோதனையில் அவருடைய இதயம், நுரையீரல், உள்பட அனைத்து முக்கிய உறுப்புகளும் நார்மலாக இருந்ததாகவும், திடீரென உயர் ரத்த அழுத்தம் எதனால் ஏற்பட்டது என்பது புரியாத புதிராக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். அவருடைய கணவரிடம் போலீஸார் இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

article-2338541-1A3A0FE0000005DC-953_306x423Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *