தமிழீழப் போக்குவரத்து கழகமும் புலிப் போராளிகளுக்கான ‘சீசன் காட்டும்’


தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் இருந்த தமிழீழ நிழல் அரசில் அனைத்துவிதமான நிர்வாகக் கட்டமைப்புக்களும் உருவாக்கபட்டமை இன்று வரையில் ஒரு பிரமிப்பாக பார்க்கப்படுகின்றது. சிங்கள அரசு மாத்திரமின்றி, சர்சதேச நாடுகளுக்கும் இந்த பிரமிப்பு உண்டு.

அந்த வகையில் விடுதலைப் புலிகளின் தமிழீழப் போக்குவரத்துக் கழகம் வழங்கிய சீசன் காட் எனப்படும் பருவகால  பயணச் சீட்டு ஒன்று முகப்புத்தகங்களில் பகிரப்பட்டு வருகின்றது. அன்றைய நாட்களில் மாணவர்களுக்கும் அரச உத்தியோகத்தர்களுக்கும் தமிழீழ அரச உத்தியோகத்தர்களுக்கும் இத்தகைய பயணச் சீட்டுக்கள் வழங்கப்பட்டுள்ளன.

இது போராளிகளுக்கு வழங்கப்படும் பருவகால பயணச் சீட்டு. ஒரு போராளி விடுமுறையில் தனது வீட்டுக்குச் செல்லும்போது, தமிழீழப் போக்குவரத்து கழகப் பேருந்துகளில் பயணிக்கும் போது இதனை உபயோகப்படுத்துவார். உண்மையில் இன்றைக்கு எந்தவிதமான ஆறுதலும் உறுதியான நலச் சுழலும் இல்லாமல் இருக்கும் முன்னாள் போராளிகளுக்கு இந்த நினைவு நெஞ்சை கிழிக்கும்.

இத்தகைய நினைவுகளையும் ஆவணங்களையும் பாதுகாத்து அடுத்த சந்ததிக்கு அறியச் செய்வோம். ஈழ மண்ணில் இருந்த தமிழீழ அரசையும் அதனை நடத்திய ஈழ விடுதலைப் புலிகளையும் அவர்கள் அறிவது அவர்களின் எதிர்கால வாழ்வுக்கும் அறிவுக்கும் சமூகப் பார்வைக்கும் அவசியமானது.

வணக்கம் லண்டனுக்காக தீபன்Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *