ஐ.நா. அறிக்கை | யேமனில் அனைத்து தரப்பிலும் மனித உரிமை மீறல்கள்


யேமனில் அனைத்து தரப்பினரும் மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதாக ஐ.நா. அறிக்கை குற்றம் சாட்டியுள்ளது.

மேலும், அந்நாட்டில் நிலவும் அரசியல் குழப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு, இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாத இயக்கமும், அல்-காய்தா பயங்கரவாத இயக்கத்தின் அரபு தீபகற்ப பிரிவும் யேமனில் காலூன்ற முயற்சி செய்து வருகின்றன என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக யேமனில் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது.

இதனிடையே அவருக்கு ஆதரவாக சவூதி தலைமையில் 10 நாடுகளின் கூட்டுப் படை அமைக்கப்பட்டது. கூட்டுப் படை விமானங்கள் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக, கடந்த ஆண்டு மார்ச் மாத இறுதியிலிருந்து வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன.

உள்நாட்டுச் சண்டையில் இதுவரை சுமார் 6,500 பேர் உயிரிழந்தனர். மூன்று லட்சத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். நாடு முழுவதும் உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்காமல் மக்கள் தவிக்கின்றனர்.

கிளர்ச்சியாளர்கள் முற்றுகையிட்டுள்ள பகுதிகளில் பொதுமக்களுக்கு உதவிப் பொருள்களை எடுத்துச் செல்ல முடிவதில்லை.

இந்த நிலையில் அங்கு கடந்த 6 மாதங்களாக நடைபெற்ற ஆய்வின் அடிப்படையில் தயாரான ஐ.நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

சவூதி கூட்டுப் படை விமானங்களின் இடைவிடாத வான்வழித் தாக்குதலைத் தொடர்ந்து, தெற்கு யேமன் பகுதியிலிருந்து கிளர்ச்சியாளர்கள் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். ஆனாலும் தலைநகர் சனா மற்றும் அந்நாட்டின் வடக்குப் பகுதியில் கிளர்ச்சியாளர்களின் ஆதிக்கம் தொடர்கிறது. தலைநகரில் பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் கூட்டுப் படை விமானங்கள் தாக்குதல் நிகழ்த்தின. குடியிருப்புப் பகுதிகளில் நிகழ்த்தப்பட்ட மேலும் 3 தாக்குதல்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ஹூதி கிளர்ச்சியாளர்கள் – முன்னாள் அதிபர் சலே ஆதரவுப் படைகள் ஆகியோர், சிறார்களை சண்டையில் ஈடுபடுத்தி வருகின்றனர்.

சில இடங்களில் பொதுமக்களை அவர்களுடைய வசிப்பிடங்களிலிருந்து விரட்டியடிக்கப்பட்டனர். வேறு சில இடங்களில் பொதுமக்களை மனிதக் கேடயங்களாக கிளர்ச்சியாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர். பொதுமக்களுக்கு உதவிப் பொருள்கள் அளிப்பதற்கு தடையாக உள்ளனர். தயீஸ் போன்ற இடங்களில் பல சமயங்களில் உதவிப் பொருள்களை கிளர்ச்சியாளர்களே அபகரித்துக் கொண்டனர். அரசுப் படைகளும் ஆயுதக் குழுக்களும் பொதுமக்களை குடியிருப்புப் பகுதியிலிருந்து வெளியேற்றி துன்புறுத்தும் சம்பவங்கள் நடைபெற்றன.

அரசு, கிளர்ச்சியாளர்கள், சர்வதேச கூட்டுப் படை என அனைத்து தரப்பினரும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டனர்.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *