இன்று இந்தியாவின் 69வது சுதந்திர தினம்


இந்தியாவின் 69வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் இந்திய மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

இந்தியாவுடனான அனைத்து விவகாரங்களும், அமைதியான முறையில் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காணப்படும் என்று தான் நம்புவதாக பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இரு நாடுகளுக்கு இடையே நல்ல நட்புறவு, கூட்டாண்மை, சிறந்த அண்டை நாடாக இருப்பதே எங்களது விருப்பம் என்றும் ஷெரிப் குறிப்பிட்டுள்ளார்.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *