அதிபர் ஒபாமா ஈரான் மீதான பொருளாதார தடைகளை நீக்க உத்தரவு


ஈரான் மீதான பொருளாதார தடையை நீக்க நடவடிக்கை எடுக்குமாறு அமெரிக்க அதிபர் ஒபாமா உத்தரவிட்டுள்ளார்.

ஈரானுக்கும், பி 5+1 நாடுகளுக்கும் (அமெரிக்கா,பிரிட்டன், சீனா, பிரான்ஸ், ரஷ்யா மற்றும் ஜெர்மனி) இடையே கடந்த இரண்டு ஆண்டுகளாக அணு ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. அப்பேச்சுவார்த்தை, கடந்த ஜூலை மதம் முடிவுக்கு வந்தது. இதையடுத்து  அமெரிக்க தலைமையிலான நாடுகளுடன் அணு ஒப்பந்தம் ஈரான் நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், ஈரான் மீதான பொருளாதார தடைகளை நீக்க அமெரிக்க அதிபர் ஒபாமா உத்தரவிட்டுள்ளார்.

அணு ஒப்பந்தம் ஏற்பட்டு நேற்றுடன் 90 நாட்கள் முடிவடைந்துள்ளது. இந்த நாள் ‘அடாப்ஷன் டே’ என்று கூறப்படுகிறது. இந்நாளில் அனைத்து விதமான தடைகளும் உடனே நீக்கப்படாது. மேலும், ‘இம்ப்ளிமெண்டேஷன் டே’ எனப்படும் ஒப்பந்தத்தை செயல்படுத்தும் நாளுக்கு 2 மாதங்கள் உள்ளது. அதுவரை தடைகள் முழுவதும் நீக்கப்பட மாட்டது என்றும் கூறப்பட்டுள்ளது.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *