அலெப்போவில் ஒரு வாரமாக தாக்குதல் நடத்தவில்லை | ரஷ்யா பதில்


சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள அலெப்போ நகரைக் கைப்பற்றும் முயற்சியாக, அதிபர் ஆசாத் தலைமையிலான அரசு படைகள் மற்றும் ரஷ்யாவின் படைகள் இணைந்து வான்வெளி தாக்குதல்களை நடத்தி வருகின்றன. புரட்சிப்படைப் போராளிகள் தங்கியுள்ள இடங்களின்மீது நடத்தப்பட்ட விமான தாக்குதல்களில் பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டனர்.

இதையடுத்து, ஐ.நா. வேண்டுகோளை ஏற்று பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி செல்லும் வகையில் அலெப்போவில் கடந்த 20-ம்தேதி காலையில் இருந்து 48 மணிநேரத்துக்கு தாக்குதலை நிறுத்த சிரியா- ரஷியா கூட்டுப்படைகள் சம்மதம் தெரிவித்தன.

இந்நிலையில், சனிக்கிழமை முதல் விமான தாக்குதல்கள் தொடங்கியதாகவும், போர் நிறுத்தம் அமலில் இருந்தபோது அலெப்போவின் வெளிப்பகுதியில் தாக்குதல் நடந்ததாகவும் மனித உரிமை கண்காணிப்பகம் கூறியது. ஆனால், இந்த குற்றச்சாட்டை ரஷ்யா மறுத்துள்ளது.

இதுபற்றி ரஷ்யா பாதுகாப்பு துறை செய்தி தொடர்பாளர் மேஜர் ஜெனரல் இகோர் கோனாஷென்கோவ் கூறுகையில், “வியாழக்கிழமையில் இருந்து ரஷ்யா அல்லது சிரிய ராணுவ விமானங்கள் மூலம் தாக்குதல்கள் நடத்தப்படவில்லை. கடந்த ஏழு தினங்களாக அலெப்போ மீது விமானப்படை விமானங்கள் பறப்பது முற்றிலும் நிறுத்தப்பட்டது. போர்நிறுத்தம் இப்போது வரை நடைமுறையில் உள்ளது” என்றார்.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *