217 பயணிகள், 7 ஊழியர்கள் ரஷ்ய விமான விபத்தில் பலி


எகிப்து நாட்டில் உள்ள சினாய் கோஸ்டல் ரிசார்ட்டில் இருந்து ரஷ்யாவின் செயின்ட் பீ்ட்டர்ஸ்பெர்கிற்கு 217 பயணிகள், 7 ஊழியர்களுடன் புறப்பட்டுச் சென்ற பயணிகள் விமானம் 23 நிமிடங்களில் மத்திய சினாய் பகுதியில் விழுந்து நொறுங்கியது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த விமானம் விபத்துக்குள்ளாகியிருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

தகவல் அறிந்த எகிப்து மீட்பு படை சம்பவ இடத்திற்குச் சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகிறது. 17 குழந்தைகள் உள்பட 100க்கும் மேற்பட்ட உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், விமானத்தில் பயணம் செய்த ஒருவரும் உயிர்பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்று மீட்புப் படை அதிகாரி தெரிவித்தார்.

அதிவேகமாக தரையை நோக்கிப் பாய்ந்த விமானம் இரண்டு துண்டாகப் பிளந்துள்ளது. அதில், உடைந்த வால் பகுதி எரிந்து விழுந்துள்ளது. பெரிய பாகம் பாறையில் விழுந்து முற்றிலும் சிதைந்துபோய்விட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *