அதிபர் ஆட்சி முறை முடிவுக்கு வருகிறது | இலங்கை


இலங்கையில் அதிபர் ஆட்சி முறையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை அந்த நாட்டு அரசு தொடங்கியுள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:
அதிபர் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வர அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான புதிய அரசமைப்புச் சட்டம் உருவாக்கப்படவுள்ளது.
புதிய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்க, தற்போதைய நாடாளுமன்றம் அரசியல் சாசன வரைவு மன்றமாக மாற்றப்பட வேண்டும்.
அதற்கான தீர்மானம், நாடாளுமன்றத்தில் அடுத்த மாதம் நிறைவேற்றப்படும்.
அதிபர் ஆட்சி முறையை ஒழிப்பது, புதிய தேர்தல் முறையை உருவாக்குவது, தமிழர் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் புதிய அரசியல் கட்டமைப்பை உருவாக்குவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் புதிய அரசமைப்புச் சட்டத்தில் இடம் பெற்றிருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
தான் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் இலங்கையில் அதிபர் ஆட்சி முறையை ஒழிப்பதாக கடந்த ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தல் பிரசாரத்தின்போது அதிபர் மைத்ரிபால சிறீசேனா வாக்குறுதி அளித்திருந்தார்.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *