சீனாவில் ரகசிய சந்திப்பு | ஆப்கன் – தலிபான் தலைவர்கள்


கடந்த வாரம், ஆப்கன் மற்றும் தலிபான் தலைவர்கள், சீனாவில் சந்தித்து ரகசிய பேச்சு நடத்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜின்ஜியாங் மாகாண தலைநகர் உரும்கியில், கடந்த, 19 மற்றும் 20ம் தேதி நடைபெற்ற இந்த சந்திப்பில், சீனா அதிகாரிகளுடன், பாக்., உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., அதிகாரிகளும் பங்கேற்றுள்ளனர். இக்கூட்டத்தில், ஆப்கன் அமைதிக் குழுவின் முக்கிய உறுப்பினர் முகமது மசூம் ஸ்டானிக்சாய், இதர உறுப்பினர்களுடன் கலந்து கொண்டுள்ளார்.

தலிபான் தரப்பில், முல்லா அப்துல் ஜலில், முல்லா முகமது ஹசன் ரஹ்மானி, முல்லா அப்துல் ரசாக் ஆகிய மூவர் பங்கேற்றுள்ளனர். ஆப்கனில், கடந்த, 13 ஆண்டுகளாக நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரை முடிவிற்கு கொண்டு வர, அதிபர் அஷ்ரப் கனி ஆர்வமாக உள்ளார். அவரது முயற்சிக்கு, சீனாவும், பாகிஸ்தானும் உதவ முன்வந்துள்ளன. இதை தொடர்ந்து, சீனாவில் ரகசிய சந்திப்பு நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *