ஸ்பெயின் நாட்டின் இளவரசி கிறிஸ்டினா இளவரசி பட்டம் (டச்சஸ் ஆப் பால்மா) இழந்தார்


ஸ்பெயின் நாட்டின் மன்னராக ஆறாவது பெலிப் இருந்து வருகிறார். அவரது தங்கை இளவரசி கிறிஸ்டினா(50). இவரது கணவர் இனாகி உர்தாங்கரின். இவர் முன்னாள் ஒலிம்பிக் கைப்பந்து வீரர் ஆவார்.

சமீபத்தில் இவர் வரி ஏய்ப்பு பிரச்சினையில் சிக்கினார். அவரது மனைவி இளவரசி கிறிஸ்டினாவும் அதில் சம்பந்தப்பட்டிருந்தார். ஸ்பெயினில் இப்பிரச்சினை பூதாகரமாக வெடித்தது. வரி ஏய்ப்பில் இளவரசியே ஈடுபட்டதாக பரபரப்பாக பேசப்பட்டது. அதை தொடர்ந்து குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில், கிறிஸ்டினா இளவரசி பட்டம் (டச்சஸ் ஆப் பால்மா) இழந்ததாக அறிவிக்கப்பட்டது.

தனது கணவர் இனாக்கி உர்டங்கருக்கு சொந்தமான வணிக நிறுவனங்களை கவனித்து வந்தார். அப்போது அந்நிறுவனங்களின் கணக்கு வழக்குகளில் முறைகேடு செய்து வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக இன்பேண்டா கிறிஸ்டினா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அரச குடும்பத்துடன் தொடர்புடைய அறக்கட்டளைக்கு வழங்கப்பட்ட நிதி சுமார் 5 மில்லியன் யூரோக்களை அபகரித்துக்கொண்டு இளவரசியின் கணவர் இனாகி உர்டாங்கரின் தலைமறைவாகி விட்டார்.

அவரது அய்சூன் நிறுவனத்தில் இளவரசியும் பங்குதாரராக இருப்பதால் பால்மா டி மல்லோர்கா நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு மால்கோர்க்கா நகர கோர்ட் நீதிமன்றம் கிறிஸ்டினாவுக்கு உத்தரவிட்டது.

அந்த உத்தரவை ஏற்று இளவரசி இன்பேண்டா கிறிஸ்டினா கோர்ட்டில் ஆஜராகி வருகிறார். இந்நிலையில், இன்று நடைபெற்ற இவ்வழக்கின் மறுவிசாரணையில் அவர் ஆஜரானார். அவரது வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தனது காரைவிட்டு இறங்கி நீதிமன்றத்துக்குள் சென்ற கிறிஸ்டினா, அரசுதரப்பு வழக்கறிஞரின் கேள்விகளுக்கு பதிலளித்து சாட்சியம் அளித்தார்.

இந்த விசாரணையில் அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் சுமார் 19 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படலாம் என சட்ட வல்லுனர்கள் கருதுகின்றனர்.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *