30 நாட்களுக்குள் முஷாரப்பை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்த கோர்ட் உத்தரவு


பாக் முன்னாள் அதிபர் முஷாரப் மீது தொடரப்பட்ட தேச துரோக வழக்கில் அவரை கைது செய்ய இஸ்லாமாபாத் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. முஷாரப் மீது தொடரப்பட் தேச துரோக வழக்கு க்டந்த சில மாதங்களுக்கு முன்னர் விலக்கி கொள்ளப்பட்டது. இதனையடுத்து அவர் மருத்துவ சிகி்ச்சைக்காக துபாய்க்கு சென்றார். இந்நிலையில் மீண்டும் அவர் மீதான வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நேரில் ஆஜராகாமல் இருந்து வந்த முஷாரப்பை லைமறைவானவர் என கோர்ட் அறிவித்தது. தொடர்ந்து 30 நாட்களுக்குள் முஷாரப்பை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்துமாறு எப்.பி.ஐ., அதிகாரிகளுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனை தொடர்ந்து முஷாரப்பி்ன் மீதான வழக்கை ஜூலை 12-ம் தேதிககு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *