அமெரிக்காவிலுள்ள இரவு விடுதி ஒன்றிற்குள் கண்மூடித்தனமாக சுட்டதில், 50 பேர் பலி


அமெரிக்காவிலுள்ள இரவு விடுதி ஒன்றிற்குள் புகுந்த மர்ம நபர், அங்கிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக சுட்டதில், 50 பேர் பலியாயினர்; 53க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இச்சம்பவத்திற்கு அமெரிக்க அதிபர் ஒபாமா, பிரதமர் மோடி உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

 

அமெரிக்காவின் ஒரலாண்டாவில் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான இரவு விடுதிக்குள் புகுந்த மர்ம நபர் கண்மூடித்தனமாக சுட்டதில், 50 பேர் பலியாயினர்; 53க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இத்தாக்குதலுக்கு ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு பொறுப்பு ஏற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் தாக்குதல் நடத்திய மர்மநபரின் பெயர் ஒமர் மேட்டின் எனவும், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பை சேர்ந்த அவன், ‛911′ என ஐ.எஸ்., இயக்கத்தால் அழைக்கப்பட்டான் எனவும் தெரியவருகிறது.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *