யாழில் மோடி வருகையினால் கவனஈர்ப்பு போராட்டம்


மோடி வருகையையொட்டி யாழ்ப்பாணத்தில் தமிழர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். யாழ்ப்பாணத்தில் பிரதமர் மோடி செல்லும் பாதையில் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஏராளமான ஆண்களும், பெண்களும் கோரிக்கை வாசகம் அடங்கிய பேனர் பிடித்தபடி நின்றிருந்தனர்.

யாழ் நகரில் காணாமல் போனவர்களது உறவினர்கள், மீனவர்கள், கிராமிய உழைப்பாளர்கள் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற யாழ்ப்பாண தமிழர்கள் கூறியதாவது:–

இந்தியப்பிரதமர் மோடி யாழ்ப்பாணம் வருவதை நாங்கள் வரவேற்கிறோம். இலங்கை அதிபர் சிறிசேனா டெல்லிக்கு சென்றதால் நல்லெண்ண அடிப்படையில் தான் மோடி வந்துள்ளார். எங்கள் கோரிக்கைகள் பல வருடங்களாக நிறைவேற்றப்படவில்லை.

இந்திய இழுவைப்படகுகளால் வடபகுதி மீனவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் அந்த முறையைத் தடுக்கக் கோரியும், இந்திய–இலங்கை மீனவர் பிரச்சினையைத் தீர்க்கக் கோரியும் இந்தப் போராட்டம் நடத்துகிறோம்.

போர் காரணமாக இடம்பெயர்ந்த மக்களை சொந்த நிலங்களில் பூர்வீகமாக குடியிருந்த பிரதேசத்தில் குடியமர்த்தல், மீள்குடியேற்றம் செய்யப்பட்ட மக்களுக்கு பூரணமான அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றி கொடுத்தல், மீள்குடியேற்ற மக்களுக்காக வழங்கப்பட்ட இந்திய வீட்டுத்திட்டத்தின் நிதி ஒதுக்கீட்டை 8½ லட்சமாக வழங்குதல், போரில் சரணடைந்தவர்களை ஒப்படைத்தல், அரசியல் கைதிகளை விடுதலை செய்தல் காணாமல் போனவர்கள் தொடர்பில் தகுந்த பதில் வழங்குதல் போன்ற கோரிக்கைகளை உள்ளடக்கியே போராட்டம் நடத்தப்படுவதாக தெரிவித்தனர்.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *